என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » சர்பானந்தா சோனோவால்
நீங்கள் தேடியது "சர்பானந்தா சோனோவால்"
அசாம் சென்றிருந்த திரிணாமுல் காங்கிரஸ் குழு மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக அம்மாநில முதல்-மந்திரி மீது மம்தா பானர்ஜி அரசு வழக்குப்பதிவு செய்துள்ளது. #AssamNRC
கொல்கத்தா:
அசாம் மாநிலத்தில் தேசிய குடியுரிமை பட்டியலில் இருந்து 40 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். அது குறித்து விசாரணை நடத்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 8 பேர் கொண்ட குழுவினர் மேற்கு வங்காளத்தில் இருந்து அசாம் சென்றனர்.
அங்கு சில்கார் விமான நிலையத்தில் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். தாக்கியதாகவும் தெரிகிறது. அவர்கள் மீதும், மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதற்கு பதிலடியாக மேற்கு வங்காள மாநிலத்தில் அசாம் மாநில முதல்- மந்திரி சர்பானந்தா சோனோவால் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் குழுவில் இடம் பெற்றிருந்த 2 பெண் எம்.பி.க்கள், ஒரு பெண் எம்.எல்.ஏ. உள்ளிட்டவர்களை தாக்குதல் நடத்த உத்தரவிட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அலிப்பூர் போலீஸ் நிலையத்தில் திரிணாமுல் காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும், கரிம்பூர் எம்.எல்.ஏ.வுமான மகுயா மொய்த்ரா சார்பிலும், எம்.பி.க்கள் ககோலி சோஸ் தஸ்திதார் மற்றும் மம்தா தாகூர் சார்பில் சுபாங் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலைய போலீசிலும் புகார் செய்யப்பட்டுள்ளன. அதில் அசாம் முதல்-மந்திரி சர்பானந்தா சோனோவால் உத்தரவின் பேரில் பெண் எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ. மீது போலீசார் தாக்குதல் நடத்தியதாக கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே அசாமில் திரிணாமுல் காங்கிரஸ் குழுவினர் தாக்கப்பட்டதை கண்டித்து நேற்று மேற்கு வங்காளம் முழுவதும் கருப்பு நாள் கடை பிடிக்கப்பட்டது. அதில் ஈடுபட்ட திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள், தர்ணாக்கள், ரெயில் மறியல், சாலை மறியல், கருப்பு உடை அணிதல், உருவ பொம்மை எரிப்பு உள்ளிட்ட பலவி தமான போராட்டங்களை நடத்தினர். #AssamNRC #MamataBanerjee #SarbanandaSonowal
×

X